அயோத்தி ராமர் கோயிலுக்கு முதல் நாளில் குவிந்த நன்கொடை இவ்வளவா?

அயோத்தியில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு, பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட முதல் நாளில் ஆன்லைன் மூலம் ரூ.3.17 கோடி அளவுக்கு நன்கொடை வந்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்


அயோத்தியில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு, பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட முதல் நாளில் ஆன்லைன் மூலம் ரூ.3.17 கோடி அளவுக்கு நன்கொடை வந்துள்ளது.

ஜனவரி 22ஆம் தேதி ராமஜென்ம பூமியில் அமைந்துள்ள ஸ்ரீபால ராமர் கோயில் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு, அடுத்த நாள் முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோயிலின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய கோயில் அறக்கட்டளை சார்பில் பக்தர்களிடம் நன்கொடையும் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, கோயிலி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளில் ஆன்லைன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரூ.3.17 கோடி அளவுக்கு நன்கொடை குவிந்துள்ளது. இது மட்டுமல்லாமல், கோயிலில் 10 இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளில் போடப்பட்டிருக்கும் ரொக்கப் பணம், காசோலை, வரைவோலைகள் இன்னமும் எண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து, கோயில் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குக்கு இந்தத் தொகை வந்துள்ளதாக அறக்கட்டளையின் அறங்காவலர் அனில் மிஸ்ரா தெரிவித்துள்ளார். கோயில் வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டிகள் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இன்னமும் ரொக்கப் பணம் எண்ணப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்றும் ஏராளமானோரிடமிருந்து ஆன்லைன் மூலம் நன்கொடை வந்திருப்பதாகவும், இதுவரை அது கணக்கிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று 2.5 லட்சம் பேர் கோயிலுக்கு வந்திருந்த நிலையில், புதன்கிழமை சுமார் 5 லட்சம் பேர் வந்திருப்பார்கள் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், பக்தர்களிடமிருந்தும், பல்வேறு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்தும் ஏராளமான பரிசுபொருள்களும் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளது.

பக்தர்கள் நிம்மதியாக கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com