

தேனிலவுக்கு அயோத்திக்கு அழைத்துவந்த கணவரிடம் போபாலைச் சேர்ந்த ஒரு பெண், விவாகரத்து கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த பெண் தன் கணவரிடம் தேனிலவுக்கு கோவாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அதற்கு பதிலாக தன்னை அயோத்தி ராமர் கோயில் மற்றும் வாராணசிக்கு அழைத்துச் சென்றதாக கணவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
ராமர் கோயிலுக்கு சென்றுவந்த 10 நாள்களுக்குப் பிறகு, அந்த பெண் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார்.
கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கு செல்ல கணவன் மற்றும் மனைவி திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கணவரின் தாயார் அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஸ்டை விழாவிற்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கணவர், மனைவியிடம் தெரிவிக்காமல் அயோத்தி மற்றும் வாராணசிக்கு விமான டிக்கெட்டுகளை பதிவு செய்துள்ளார். அப்போது, குறை ஏதும் தெரிவிக்காமல் அந்தப் பெண் அயோத்தி மற்றும் வாராணசிக்கு சென்று வந்துள்ளார்.
பயணம் முடித்து திரும்பிய அவர், கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ளார். விவாகரத்து மனுவில் தனது கணவர், தன்னை விட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.