நிதீஷ் குமார் கூட்டணி விலகல்? : ராஷ்டிரிய ஜனதா தலைவர்கள் சந்திப்பு

முதல்வர் நிதீஷ்குமார் கூட்டணியிலிருந்து விலகுவதாக வெளியானது குறித்து விவாதிக்க ராஷ்டிரிய ஜனதா தலைவர்கள் சந்தித்துள்ளனர்.
நிதீஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ்
நிதீஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ்

பாட்னா: பிகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையில் ராஷ்டிரியா ஜனதா தளக் கட்சியின் தலைவர்கள், கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சந்திப்புக்காகக் கூடியுள்ளனர்.

மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் மஹாகத்பந்தன் கூட்டணியில் இருந்து நிதீஷ் குமார் விலகவுள்ளதாக வெளியான தகவலினால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

லாலு பிரசாத் யாதவின் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மனைவி ராப்ரி தேவி, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

நிதீஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறினால் காங்கிரஸ், மூன்று இடதுசாரி கட்சிகள், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் சேர்த்தாலும் பெரும்பான்மை வகிக்க 8 எம்எல்ஏக்கள் குறைவாக இருப்பர்.

இந்தக் குழப்பங்கள் குறித்து விவாதிக்க ராஷ்டிரிய ஜனதாவின் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com