நாடாளுமன்ற தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் அனைத்து தொகுதிகளையும் வெல்ல முனைப்பு காட்டும் பாஜக! 

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் தேர்தல் பணிகளில் பாஜக மும்முரமாக களமிறங்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் அனைத்து தொகுதிகளையும் வெல்ல முனைப்பு காட்டும் பாஜக! 

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் தேர்தல் பணிகளில் பாஜக மும்முரமாக களமிறங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடந்த 2019ஆம் ஆண்டு,  லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இருவேறு தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின், நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இதுவாகும். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில், ஜம்மு காஷ்மீரில் எந்த கட்சி அதிக தொகுதிகளை வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பாஜக தேர்தல் ஆலோசனை கூட்டத்துக்குப் பின் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் கௌல் கூறியதாவது,  ”தேர்தல் பணிக்காக, ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக பாஜக தலைவர் நிர்மல் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 5 தொகுதிகளையும் வெல்லும் முனைப்புடன் பாஜக செயல்படுவதாகவும், தேர்தலை எதிர்கொள்ள ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும், இம்மாத இறுதிக்குள் 6 தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com