இஸ்ரேலில் வேலைக்குச் செல்ல காத்துக்கிடக்கும் உ.பி. இளைஞர்கள் -மத்திய அரசை விமர்சித்த காங்.

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக அரசு தெரிவிக்கும் போது, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இஸ்ரேலில் உள்ள வேலை வாய்ப்புக்காக காத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி அரசை குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்


வேலையில்லாத் திண்டாட்டத்தின் எதிரொலியாக, உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், இஸ்ரேலில் வேலைவாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் வரிசையில் காத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கும் போது,  இஸ்ரேலில் உள்ள வேலை வாய்ப்புக்காக மக்கள் ஏன் வரிசையில் காத்துக்கிடக்க வெண்டுமென்ற கேள்வியை எழுப்பியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ். 

இது குறித்து எக்ஸ்(டிவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ்,
”போர் நடைபெறும் இஸ்ரேலில்  பணியாற்றி வந்த பாலஸ்தீனிய மக்களுக்கு மாற்றாக பணியாற்ற வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்தில், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

நாம் அனைவரும் தார்மீக மற்றும் அரசியல் பிரச்சினைகளை களைந்து விடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com