தானே: பஸ் மீது கார் மோதியதில் 50 குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர்!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதிய விபத்தில் பள்ளியில் பயின்ற 50 மாணவர்கள் காயமின்றி தப்பினர்.
தானே: பஸ் மீது கார் மோதியதில் 50 குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர்!

தானே: மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதிய விபத்தில் பள்ளியில் பயிலும் 50 மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

நாசிக்கில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுடன் பேருந்து தானே நகரில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்று கொண்டிருந்தபோது மாலை சுமார் 5.30 மணியளவில் பிவாண்டி பைபாஸ் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பட்கா காவல் நிலைய ஆய்வாளர் பி.ஆர்.கும்பர் தெரிவித்தார்.

பேருந்து மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் பேருந்து சேதமடைந்தது.  முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் ஓட்டுநர் திடீரென பிரேக்கை அழுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக அவர் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் மாணவர்கள் காயமடையவில்லை என்றும், பயணத்தைத் தொடர வேறு பேருந்தில் மாணவர்கள் மாற்றப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com