திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

கடவுளை நம்பமாட்டோம்: மக்களை உறுதிமொழி ஏற்கவைத்த தலைமை ஆசிரியர் கைது!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இந்துக் கடவுள்களை நம்பமாட்டோம் என மக்களை உறுதிமொழி ஏற்கவைத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:12 pm

DIN

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இந்துக் கடவுள்களை நம்பமாட்டோம் என மக்களை உறுதிமொழி ஏற்கவைத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பராரி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியின் ஆசிரியராக நியமிக்கப்பட்டவர் ரதலால் சரோவர்(60), இவர் மாவட்ட கல்வி அதிகாரியால் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த ஜனவரி 22 அன்று அயோத்தி கோயிலில் சிலை பிரதிஷ்டை நடைபெற்றபோது, சரோவர், ரத்தன்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மொங்ஹதராய் கிராமத்தில் மாணவர்கள் உள்பட ஒரு குழுவைக் கூட்டியுள்ளார் தலைமை ஆசிரியர். 

அந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் சிவன், ராமர், கிருஷ்ணர் உள்ளிட்ட இந்துக் கடவுள்களை வழிபடக்கூடாது, புத்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என மக்களை உறுதிமொழி ஏற்கவைத்ததாக வலதுசாரி அமைப்பின் அதிகாரி ரூபேஷ் சுக்லா புகார் அளித்தார். 

சரோவரின் இந்த உறுதிமொழி விடியோ மூலம் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, ஸனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.