மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் நிலநடுக்க எச்சரிக்கை அறிய நில அதிர்வு மீட்டர்!

மும்பை-அகமதாபாத் 'புல்லட் ரயில்' வழித்தடத்தில் 28 நில அதிர்வு மானிகள் நிறுவப்படும் என்று தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் நிலநடுக்க எச்சரிக்கை அறிய நில அதிர்வு மீட்டர்!

மும்பை-அகமதாபாத் 'புல்லட் ரயில்' வழித்தடத்தில் 28 நில அதிர்வு மானிகள் நிறுவப்படும் என்று தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

பயணிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஜப்பானிய ஷிங்கன்சென் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரம்பகால பூகம்ப கண்டறிதல் அமைப்பு நிறுவப்படும் என்று தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

இதில் 28 நில அதிர்வு மானிகளில் 22 ஒரு நேர்கோட்டில் நிறுவப்படும். இவற்றில் 8 மும்பை, தானே, விரார் மற்றும் போய்சர் ஆகிய நகரங்களிலும், 14 குஜராத்தின் இருக்கும் வாபி, பிலிமோரா, சூரத், பருச், வதோதரா, ஆனந்த், மகேம்பதாத் மற்றும் அகமதாபாத்தில் நிறுவப்படும்.

உள்நாட்டு நில அதிர்வு மானிகள் என அழைக்கப்படும் 28 நில அதிர்வு மானிகளில் மீதமுள்ள ஆறு நில அதிர்வு மானிகள், மகாராஷ்டிராவின் கேத், ரத்னகிரி, லாத்தூர் மற்றும் பாங்ரி போன்ற பூகம்ப பாதிப்புக்குள்ளான பகுதிகளிலும், குஜராத்தின் அடேசர் மற்றும் பழைய பூஜ் பகுதிகளிலும் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், துணை மின் நிலையங்கள் மற்றும் சீரமைப்பில் உள்ள சுவிட்ச் போஸ்ட்களில் சீஸ்மோமீட்டர்கள் நிறுவப்படும்.  இவை முதன்மை அலைகள் மூலம் பூகம்பத்தால் தூண்டப்பட்ட அதிர்வுகளைக் கண்டறிந்து தானியங்கி முறையில் மின் நிறுத்தத்தை செயல்படுத்தும்.

மின்சாரம் நிறுத்தப்படுவது கண்டறியப்பட்டவுடன் அவசரகால பிரேக்குகள் செயல்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதியில் இயங்கும் ரயில்கள் நிறுத்தப்படும்.

கடந்த 100 ஆண்டுகளில் 5.5 க்கும் அதிகமான ரிக்டர் அளவிலான பூகம்பங்கள் ஏற்பட்டுள்ள அதிவேக நடைபாதையில் உள்ள பகுதிகள் ஜப்பானிய நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com