சண்டீகர் மேயர் தேர்தல்: கவுன்சிலர்களை விலை பேசியது பாஜக!

சண்டீகரில் மூத்த துணை மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு (ஜன. 30) இன்று நடைபெற்றது. 
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

சண்டீகர் மேயர் தேர்தலையொட்டி கவுன்சிலர்களை விலைக்கு வாக்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுட்டதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

சண்டீகரில் மூத்த துணை மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு (ஜன. 30) இன்று நடைபெற்றது. 

பாஜக 16 வாக்குகள், இந்தியா கூட்டணி 12 வாக்குகள் பெற்று, பாஜகவின் மனோஜ் சோங்கர் மேயராக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தேர்தல் நடத்தும் அதிகாரி, வாக்குச்சீட்டில் பேனாவைக் கொண்டு எழுதும் காணொலி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பாஜகவின் வெற்றியை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்நிலையில் மேயர் தேர்தல் குறித்து பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ''இந்தியா கூட்டணியிலுள்ள ஆம் ஆத்மியும் காங்கிரஸும் மேயர் தேர்தல் மூலம் ஒன்றாக இணைந்து களம் கண்டுள்ளது. பாஜகவின் நோக்கம் ஆரம்பம் முதலே தவறானதாகவே இருந்தது. அவர்கள் (பாஜக) எங்கள் கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர்களை விலைபேசினர். அதிகாரத்தைக்கொண்டு எதையும் செய்ய முடியும் என்ற அச்சுறுத்தலை பாஜகவினர் முன்னிறுத்தினர். ஆனால், அதிருஷ்டவசமாக ஒரு கவுன்சிலரைக் கூட அவர்களால் தங்கள் வழிக்கு கொண்டுவர முடியவில்லை'' எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com