குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

நாடாளுமன்றத்தில் 1.15 மணிநேரம் குடியரசுத் தலைவர் உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 1 மணிநேரம் 15 நிமிடங்கள் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.
Published on

புதுதில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 1 மணிநேரம் 15 நிமிடங்கள் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.

நாடாளுமன்ற 17-ஆவது மக்களவையின் கடைசி நாடாளுமன்றக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினார்.

குடியரசுத் தலைவரின் உரையில், கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்து பேசினார். பொருளாதாரம், தொழில்நுட்பம், விண்வெளி, பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசு செய்த பணிகளை விளக்கினார்.

மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிகழ்வும் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெற்றிருந்தது.

சரியாக காலை 11 மணிக்கு தொடங்கிய குடியரசுத் தலைவரின் உரை 1 மணிநேரம் 15 நிமிடங்களுக்கு பிறகு பகல் 12.15 மணியளவில் நிறைவடைந்தது.

நாளை காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

அதன்பிறகு குடியரசுத் தலைவர் உரையின் நகல் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர்களுக்கு பதிலளித்து உரையாற்றவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com