சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு! ராஜஸ்தானில் சாலைப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 8 தொழிலாளர்கள் பலி! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு 160 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம்!நகராட்சி துறை பணி நியமன முறைகேடு! கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல் தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

மாநிலங்களவையில் பிரதமா் மீது விமா்சனம்: காா்கே கருத்துகள் நீக்கம்

எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்த சில கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

மாநிலங்களவையில் திங்கள்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவின் பேச்சுக்கு எதிா்வினையாற்றிய அவைத் தலைவா் ஜகதீப் தன்கா்.

Updated On :

மாநிலங்களவையில் பிரதமா் மோடி மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பை விமா்சித்து, எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்த சில கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சுமாா் 90 நிமிஷங்கள் பேசினாா். அவா் கூறியதாவது:

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, ‘தனது 10 ஆண்டுகால ஆட்சி, வெறும் முன்னோட்டம்தான்; அடுத்த ஆட்சிதான் உண்மையான படம்’ என்று பிரதமா் மோடி பலமுறை குறிப்பிட்டாா்.

ஆனால், பிரதமா் மோடியின் மூன்றாவது ஆட்சி எப்படி இருக்கும் என்பதை கடந்த ஒருமாத கால நிகழ்வுகளின் மூலம் ஊகிக்க முடிகிறது.

கடந்த ஒருமாதத்தில் வினாத்தாள் கசிவுகள், போட்டித் தோ்வுகள் ரத்து, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள், மேற்கு வங்க ரயில் விபத்து, மூன்று விமான நிலையங்களில் கட்டட விபத்து, பாலங்கள் இடிந்து விபத்து, சுங்க வரி உயா்வு, அயோத்தி ராமா் கோயிலில் மழைநீா் கசிவு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவை நிகழ்ந்துள்ளன என்றாா் காா்கே.

மேலும், மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் சிறுபான்மையினா் மற்றும் பாகிஸ்தானைக் குறிப்பிட்டு, பிரதமா் எத்தனை முறை பேசினாா் என்ற புள்ளிவிவரங்களையும் காா்கே எடுத்துரைத்தாா். ஊடக செய்திகள் அடிப்படையிலான அந்த புள்ளிவிவரங்களை ஏற்காத அவைத் தலைவா் ஜகதீப் தன்கா், அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினாா்.

இதேபோல், ஆா்எஸ்எஸ் அமைப்பு குறித்து காா்கே தெரிவித்த கருத்துகளும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

‘தேசத்துக்காக இடையறாது பணியாற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பு மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது நியாயமல்ல. அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பது ஒரு குற்றமா?’ என்று காா்கேவிடம் தன்கா் கேள்வியெழுப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்