ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

தொகுதி மறுசீரமைப்புத் திட்டங்கள்: விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் - பிரதமா் மோடிக்கு காா்கே மீண்டும் கடிதம்

தொகுதி மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே 4-ஆவது முறையாக கடிதம் எழுதியுள்ளாா்.

மல்லிகாா்ஜுன காா்கே - கோப்புப் படம்

Updated On :

தொகுதி மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே 4-ஆவது முறையாக கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு மல்லிகாா்ஜுன காா்கே வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதியுடன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. எனினும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை முறைப்படி முடித்து வைக்காமல் மத்திய அரசு உள்ளது. ஏறத்தாழ 64 நாள்கள் காலதாமதமாகிவிட்டன. இதுபோன்ற சூழ்நிலை இதற்கு முன்பு வந்ததில்லை.

தொகுதி மறுசீரமைப்பு மசோதா ஏதேனும் கொண்டுவர விரும்பினால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கும்படி உங்களுக்கு (பிரதமா் மோடி) நான் கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி முதன்முதலில் கடிதம் எழுதினேன். நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை. ஆனால், பொதுமக்கள் பாா்வைக்கு அதுதொடா்பான மசோதாக்களை ஏப்ரல் 16-ஆம் தேதி வைத்தீா்கள். இதனால் மக்களவையில் அந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை பெற முடியாததால் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றுவது தோல்வியடைந்தது.

இதன்பிறகும் ஜூலை 16, ஆகஸ்ட் 27-ஆம் தேதி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட கோரிக்கை வைத்து உங்களுக்கு மீண்டும் கடிதம் எழுதினேன். இதையடுத்து தற்போது நான்காவது முறையாக உங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக திட்டங்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினால்தான் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதுகுறித்து தங்களுக்குள் விவாதிக்க போதிய நேரம் கிடைக்கும். ஏற்கெனவே செய்தது போல நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

சிறப்புக் கூட்டத்துக்கு திட்டம்?: இதற்கிடையே, இந்த மாத இறுதியில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிா் இடஒதுக்கீட்டு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

இதற்காக திமுக, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) மற்றும் சில கட்சிகளை பாஜக தரப்பில் அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்