சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

காவிரி விவகாரம்: தமிழக அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுறுத்தி இருப்பது குறித்து...

Cauvery Issue...

கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய அன்புமணி ராமதாஸ் - டிஎன்எஸ்

Published On :

கோவை: காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று இடைத்தேர்தலில் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், காவிரி நீர் பிரச்னை, இடைத்தேர்தல் முடிவுகள், கனிமவளக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது தொடர்பாக, அதிமுக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலவும் நீர் பிரச்னை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க முதல்வர் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றார். மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதாகவும், காவிரி ஒப்பந்தத்தின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை முழுமையாக வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். காவிரி பிரச்னையில் தமிழக அரசு தீவிரமாகச் செயல்பட்டு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுவதாகக் கூறப்படும் மணல் மற்றும் கனிமவளக் கொள்ளைகள் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்றும், பல மாநிலங்கள் தொடர்புடைய விவகாரம் என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வாக்காளர் உரிமை தொடர்பான புகார்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, வாக்கு செலுத்துவது அடிப்படை உரிமை என்றும், வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அன்புமணி ராமதாஸ், ஒவ்வொரு தேர்தலின்போதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துகளைக் கேட்டே நிலைப்பாடு எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

வதந்தி

தமிழக வெற்றிக் கழகத்துடன் பாமக கூட்டணி அமைக்க உள்ளதாக வெளியாகும் தகவல்கள் வதந்திகள் என்றும், அமைச்சர் பதவி கேட்கவில்லை, கேட்கப்போவதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணிகள் குறித்து பேசுவீர்களா என்று கேட்டதற்கு அரசியலில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்று தெரிவித்தார்.

Tamil Nadu Government Must Convene an All-Party Meeting – Anbumani Ramadoss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.