மருத்துவர்கள் நாள்: பிரதமர் மோடி, தலைவர்கள் வாழ்த்து!
உயிர்காக்கும் உத்தம சேவையளித்து வரும் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


ஜூலை 1 - தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைய ஆண்டின் கருப்பொருளாக ‘குணப்படுத்தும் கைகள், அக்கறையுள்ள இதயங்கள்’ என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி தேசிய மருத்துவர்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, பிரதமர் மோடி உள்பட அரசியல் தலைவர்களும் பல்வேறு தரப்பினரும் உயிர்காக்கும் உத்தம சேவையளித்து வரும் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்த நாள் உடல்நலம் காக்கும் ஹோரோக்களின் அளப்பறியா ஈடுபாட்டுக்கும் சேவைக்கும் மரியாதை செலுத்த வேண்டிய நாள். குறிப்பிடத்தக்க திறனுடன் மிகக் சவாலான சிக்கல்களைக் கடப்பவர்கள் அவர்கள்.
மருத்துவர்களுக்கான உரிய மதிப்பை அவர்கள் பெறுவதையும், இந்தியாவில் சுகாதாரத்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும், நம் அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது எனப் பதிவிட்டு மருத்துவர்களை வாழ்த்தியுள்ளார் மோடி.
மருத்துவர் பிதான் சந்திர ராய்(பி. சி. ராய்) மருத்துவத் துறைக்கு ஆற்றிய மகத்தான சேவையை சிறப்பிக்கும் விதமாக 1991-ஆம் ஆண்டு முதல், அவரது பிறந்தநாளான ஜுலை 1 தேசிய மருத்துவர்கள் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1882-ஆம் ஆண்டு பாட்னாவில் பிறந்த பி. சி. ராய், இந்திய மருத்துவ குழுமம் (ஐஎம்ஏ), இந்திய மருத்துவ சங்கம் ஆகியவற்றை நிறுவ பெருமுயற்சி எடுத்தவர். மேற்கு வங்கத்தின் முதல்வராக முதன் முதலாக பதவி வகித்த சிறப்புக்குரியவர் ஆவார்.
இந்த நிலையில், 1962இல் தனது 80வது வயதில் அவரது பிறந்த நாளான ஜூலை 1-ஆம் தேதியே மரணமமுமடைந்தார். அவரது மகத்தான சேவைகளைப் பாராட்டி, 1961இல் அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. மருத்துவம், அரசியல், அறிவியல், தத்துவவியல், இலக்கியம், கலைத்துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் அன்னாரது பெயரில், ’பி. சி. ராய் தேசிய விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...