காலனித்துவ சட்டங்கள் அகற்றம்; இனி விரைவான நீதி: அமித் ஷா

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா
அமித் ஷா
Published on
Updated on
1 min read

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, காலனித்துவ சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளதாக, இனி தாமதமின்றி விரைவாக நீதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமித் ஷா பேசியதாவது:

“முதலில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நம்முடைய சொந்த குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்த சட்டங்கள் இந்திய நெறிமுறைப்படி செயல்படும்.

75 ஆண்டுகளுக்கு பிறகு சிந்திக்கப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. காலனித்துவ சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளது.

தண்டனைக்கு பதிலாக தற்போது நியாயம் கிடைக்கும். தாமதத்துக்கு பதிலாக விரைவான விசாரணையும் தீர்ப்பும் கிடைக்கும். முன்னதாக காவல்துறையின் உரிமை மட்டுமே பாதுகாக்கப்பட்டது. இனி புகார்தாரர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமையும் பாதுகாக்கப்படும்.

நமது அரசியலமைப்புக்கு ஏற்றவாறு சட்டப் பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்க தீர்மானித்தோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கூட்டாக பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டால் 20 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும். சிறுமிகளை வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும்.

பொய் வாக்குறுதி அளித்து அல்லது அடையாளத்தை மறைத்து பாலியல் ரீதியாக ஏமாற்றினால் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. பெண் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண் வீட்டிலேயே வாக்குமூலம் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையும் ஆன்லைனில் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நிறைய பெண்களை காப்பாற்ற முடியும் என நாங்கள் நம்புகிறோம்.

அதிகாலை 12.10 மணிக்கு புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் குவாலியர் காவல் நிலையத்தில் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

அமித் ஷா
புதிய குற்றவியல் சட்டங்களில் அரசியலமைப்புக்கு எதிரான மாற்றங்கள்: ப. சிதம்பரம்

ஆங்கிலேயா் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com