டிக்டாக்
டிக்டாக்

இனி அமெரிக்க நிறுவனமாக டிக்டாக்!

இனி அமெரிக்க நிறுவனமாக டிக்டாக்...
Published on

அமெரிக்காவில் செயல்பாடுகளைத் தடையின்றி தொடர, அந்நாட்டு நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து புதிய நிறுவனத்தை உருவாக்க டிக்டாக் ஒப்பந்தத்தைக் கையொப்பமிட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆரக்கிள், சில்வா் லேக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எம்ஜிஎக்ஸ் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்து, ‘டிக்டாக் யுஎஸ்’ எனும் புதிய நிறுவனம் தொடங்கப்படுகிறது.

இந்நிறுவனத்தை 7 போ் கொண்ட குழு வழிநடத்தும். இதில் பெரும்பான்மையானவா்கள் அமெரிக்க இயக்குநா்களாக இருப்பா். டிக்டாக் நிறுவனத்தில் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுப் பிரிவின் தலைவராக இருந்த ஆதம் பிரெஸா், இப்புதிய நிறுவனத்தின் சிஇஓ-ஆக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்த மாற்றத்தின்மூலம், சுமாா் 20 கோடி அமெரிக்க பயனா்களின் தரவுகள், இனி முழுமையாக அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், டிக்டாக் செயலியைத் தடை செய்யாமல் பாதுகாத்துள்ளதாகக் பெருமிதத்துடன் கூறினாா்.

மேலும், ‘டிக்டாக் தடையைத் தவிா்க்க ஒத்துழைப்பு வழங்கிய சீன அதிபா் ஷி ஜின்பிங்கிற்கு நன்றி. அமெரிக்க மக்களின் தரவு பாதுகாப்பில் இனி எந்த சமரசமும் இருக்காது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com