
சந்தாக்களின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், பயனாளர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட திட்டங்களையும் நீக்கியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
வருகிற ஜூலை 3ஆம் தேதி முதல் ஜியோ நெட்வொர்க் தன்னுடைய சந்தா திட்டங்களின் விலை நிர்ணயத்தை உயர்த்தியுள்ளது. அதாவது, அடிப்படை சந்தாவான ரூ.155 திட்டத்தின் விலையை 22% உயர்த்தியுள்ளதன் மூலம் தற்போதைய இதன் விலை ரூ.189-ஆக உயர்கிறது.
அதுமட்டுமின்றி அதிகப்படியான பயனாளர்களால் பயன்படுத்தப்பட்ட ரூ.395 மற்றும் ரூ.1559 ஆகிய இரண்டு சந்தாக்களையும் ஜியோ நிறுவனம் நீக்கியுள்ளது.
இதன்மூலம் குறைந்த விலை சந்தாவாக ரூ.155 திட்டம் மட்டுமே இருக்கும்; அதாவது ரூ.189 திட்டம் மட்டுமே இருக்கும். ஆனால், 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்கும் இந்தத் திட்டமானது ரூ.395 மற்றும் ரூ.1559 திட்டங்களைப் போல வரம்பற்ற 5ஜி சேவையை வழங்காது. இது பயனாளர்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது.
இந்நிலையில் ஜியோ மட்டுமின்றி ஏர்டெலும், ஜூலை 4ஆம் தேதி முதல் வோடொஃபோன் ஐடியாவும் தங்களின் சந்தாக்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால் பயனாளர்கள் பலரும் தங்களுடைய சந்தா முடிவடையாத நிலையிலும் ரீசார்ஜ் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.