நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது: அவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்

அவைக் குறிப்பில் நீக்கிய கருத்துகளை மீண்டும் சேர்க்கக் கோரி அவைத் தலைவருக்கு கடிதம்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி-

மக்களவையில் பேசிய சில கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கியதை மீண்டும் சேர்க்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திங்கள்கிழமை பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி உரையில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ், அக்னிவீர் திட்டம் குறித்த சில பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி ஓம் பிர்லா உத்தரவிட்டிருந்தார்.

ராகுல் காந்தி
மோடியின் உலகில் உண்மையை நீக்கலாம், யதார்த்தத்தில் உண்மையை நீக்க முடியாது: ராகுல்

இந்த நிலையில், அவைக் குறிப்பில் இருந்து நீக்கியவற்றை மீண்டும் சேர்க்கக் கோரி ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:

“மக்களவை நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் 380-இல் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை நீக்குவதற்கான அதிகாரங்களை அவைத் தலைவர் பெறுகிறார்.

இத்தகைய சூழலில், எனது உரையின் கணிசமான பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நீக்கப்பட்ட வார்த்தைகள் விதி 380-இன் கீழ் வராது என்பதை கூற விரும்புகிறேன்.

கள நிலவரத்தையும் உண்மையையுமே இந்த அவையில் தெரிவிக்க விரும்புகிறேன். மக்களின் குரலாக ஒவ்வொரு உறுப்பினரும் இந்திய அரசியலமைப்பின் 105(1) வது பிரிவின் கீழ் அவையில் பேச சுதந்திரம் உள்ளது. மக்கள் பிரச்னைகளை அவையில் எழுப்புவது ஒவ்வொரு உறுப்பினரின் உரிமை. அந்த உரிமையையும், நாட்டு மக்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் செயலிலேயே நேற்று நான் ஈடுபட்டேன்.

எனது கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது.

இந்த தருணத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குரின் பேச்சை குறிப்பிட விரும்புகிறேன். அவரின் பேச்சுகள் முழுவதிலும் குற்றச்சாட்டுகள் நிறைந்து இருந்த நிலையில், ஒரே ஒரு வார்த்தை மட்டும் நீக்கப்பட்டதை கண்டு ஆச்சரியமடைந்தேன்.

அவை நடவடிக்கையில் இருந்து நீக்கப்பட்ட எனது கருத்துகளை மீண்டும் சேர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி கடிதம்
ராகுல் காந்தி கடிதம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com