2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

மோடியின் உலகில் உண்மையை நீக்கலாம், யதார்த்தத்தில் உண்மையை நீக்க முடியாது: ராகுல்

மோடியின் உலகில் உண்மையை நீக்கலாம், யதார்த்தத்தில் உண்மையை நீக்க முடியாது என்று ராகுல் தெரிவித்தார்.

Published On :

மோடியின் உலகில் உண்மையை நீக்கலாம், யதார்த்தத்தில் உண்மையை நீக்க முடியாது என்று ராகுல் தெரிவித்தார்.

மக்களவையில் ராகுல் காந்தியின் நேற்றைய பேச்சில் சில பகுதிகளை நீக்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல், “மோடியின் உலகில் உண்மையை நீக்கலாம், யதார்த்தத்தில் உண்மையை நீக்க முடியாது” என்று அவர் தெரிவித்தார்.

”நான் சொல்ல வேண்டியதை நான் சொன்னேன், அதுதான் உண்மை. அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நீக்கலாம். உண்மை எப்போதும் உண்மையேயாகும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று(ஜூலை 1) பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

அதில் ஹிந்துக்கள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய சில பகுதிகளும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்களும் மற்றும் அக்னிவீர் குறித்து பேசியதும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.