
ஹரியாணா மாநிலம் கர்னல் பகுதியில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து அசம்பாவிதங்கள் நிகழாமல் பார்த்துக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சரக்கு ரயிலில் இருந்த கண்டெய்னர் பெட்டிகள் காலியாக இருந்ததே இந்த விபத்துக்கான காரணமென முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.