மணிப்பூரில் கனமழை: ஜூலை 4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

மணிப்பூரில் சில பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை...
மணிப்பூரில் தேங்கிநிற்கும் மழைநீர்
மணிப்பூரில் தேங்கிநிற்கும் மழைநீர்

மணிப்பூரின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மணிப்பூரின் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் இரண்டு பெரிய ஆறுகள் நிரம்பி, வெள்ளநீர் வெளியேறியுள்ளதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்றும், நாளையும் அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் தேங்கிநிற்கும் மழைநீர்
நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது: நடிகர் விஜய்

மேற்கு இம்பாலில் உள்ள சிங்ஜமேய் ஓனாம் திங்கல், கொங்பா ஐரோங்கில் உள்ள கொங்பா நதி மற்றும் இம்பாலின் கிழக்கில் கெய்ரோவின் சில பகுதிகளில் அணை உடைந்து நீர் வெளியேறியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கனமழையின் காரணமாக கிழக்கு இம்பாலில் உள்ள சவோம்புங், க்ஷெடிகாவோ ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்தியா-மியான்மர் சாலையின் 3 கி.மீ நீளத்திற்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் தேங்கிநிற்கும் மழைநீர்
புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை சேனாதிபதி ஆற்றில் 25 வயதுள்ள இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் அங்குப் பாதிப்புகள் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com