மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நீட் கலந்தாய்வு எப்போது..?

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிப்பு!

News image

படம் | ஏஎன்ஐ

Updated On :6 ஜூலை 2024, 10:03 am

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

நீட் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சனிக்கிழமை(ஜூலை 6) அறிவித்துள்ளது.

முன்னதாக நீட் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், கலந்தாய்வு தேதி குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.