
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான மதுபானக் கூடம் மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மதுபானக் கூடங்களை திறந்து வைத்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து விராட் கோலியின் மதுபானக் கூடம் உள்பட 4 மதுபானக் கூடங்கள் மீது சனிக்கிழமை நள்ளிரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விராட் கோலிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்8 கம்யூன் என்ற மதுபானக் கூடம். இந்த நிறுவனத்துக்கு தில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் கிளைகள் உள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூரு எம்ஜி சாலையில் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே ஒன்8 கம்யூன் மதுபானக் கூடத்தின் கிளை உள்ளது. மேலும், பல நிறுவனங்களின் மதுபானக் கூடங்களும் இந்த சாலையில் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு எம்ஜி சாலையில் உள்ள மதுபானக் கூடங்களில் அதிக சப்தத்துடன் மக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக இசைகள் இசைக்கப்படுவதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை தொடர்ந்து, சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், ஒன்8 கம்யூன் உள்பட 4 மதுபானக் கூடங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட நேரமான அதிகாலை 1 மணிக்கு மேல் மதுபானக் கூடங்களை திறந்து வைத்திருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.