
கதுவா தாக்குதல் குறித்து மக்களவையில் பேசுவேன் என காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஜூலை 9) தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கதுவா விவகாரம் குறித்து ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர். செய்தியார்களுக்கு நிற்காமல் பதில் அளித்த ராகுல் காந்தி, இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன் எனக் குறிப்பிட்டு நகர்ந்து சென்றார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ரேபரேலி தொகுதிக்கு ராகுல் காந்தி சென்றிருந்தார்.
அங்கு, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
கடந்தாண்டு சியாச்சின் தீ விபத்தில் மக்களவை காப்பாற்றும்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் அன்சுமான் சிங்கின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்தார்.
நேற்று அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும், மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கியிருந்தவர்களையும் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து இன்று உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிக்குச் சென்றிருந்தார். தனது உத்தரப் பிரதேச பயணத்தை முடித்துக்கொண்டு தில்லி திரும்பும்போது, லக்னெள விமான நிலையத்தில் செய்தியாளர்கள் ராகுல் காந்தியைத் தொடர்ந்து வந்து, கதுவா தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு நிற்காமல் பதிலளித்துச் சென்ற ராகுல் காந்தி, மக்களவையில் இது குறித்துப் பேசுவேன் என பதிலளித்து நகர்ந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.