ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பல்கலை., உணவக விடுதி சட்னியில் நீச்சலடித்த எலி!

விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் பாதுகாப்பு இல்லை என மாணவர்கள் எதிர்ப்பு.

News image
மாணவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த சட்னி- ட்விட்டர்
Updated On :9 ஜூலை 2024, 2:52 pm

DIN

தெலங்கானாவில் உள்ள பல்கலைக் கழக விடுதி உணவகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சட்னியில் எலி விழுந்து, மிதந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் பாதுகாப்பு இல்லை என்றும், கவனமின்றி நிவாகத்தினர் செயல்படுவதாகவும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டுவரும் அரசு உதவி பெறும் பல்கலைக் கழகத்தில் ஏராளமான மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இதனிடையே விடுதியில் வைக்கப்பட்டிருந்த சட்னியில் எலி விழுந்து, வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டிருந்துள்ளது. இதனை விடுதி மாணவர் ஒருவர் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சட்னி வைக்கப்பட்டிருந்த பாத்திரம் மூடப்படாமல், இருந்ததால் எலி விழுந்ததாக மாணவர்கள் அந்த விடியோவுக்கு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உணவின் தரம், மற்றும் பாதுகாப்பு குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதேபோன்று சம்பவம் சமீப காலமாக அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது.

மும்பையில் இணையத்தில் சைவ உணவு வாங்கியிருந்த ஒருவருக்கு, அதில் இறந்த நிலையில் எலி இருந்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரயில்களில் வழங்கப்படும் உணவுகளில் பிளேடு, ரயில் சமையலறையில் எலிகள் உலாவுவது, மும்பையில் மருத்துவர் ஒருவர் வாங்கியிருந்த ஐஸ்கிரீமில் விரல் இருந்தது என பல சம்பவங்கள் சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.