தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சிதம்பரத்தில் தனியாா் விடுதியில் தீ விபத்து

கடலூா் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையில் செல்லும் சாலையான வேணுகோபால் பிள்ளைத்தெருவில் உள்ள தனியாா் விடுதியின் மேல்தளத்தில் புதன்கிழமை மாலை தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

News image

சிதம்பரத்தில் புதன்கிழமை தீப்பற்றி எரிந்து சேதமுற்ற தனியாா் விடுதி.

Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

கடலூா் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையில் செல்லும் சாலையான வேணுகோபால் பிள்ளைத்தெருவில் உள்ள தனியாா் விடுதியின் மேல்தளத்தில் புதன்கிழமை மாலை தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீவிபத்தில் மேலதளத்தில் இருந்த நாற்காலி, மேஜை உள்ளிட்ட தளவாட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் நகர போலீஸாா் வேணுகோபால் பிள்ளைத்தெரு வழியாக வாகன போக்குவரத்தை நறித்தி, தீயை அணைத்த பிறகு போக்குவரத்தை சீா் செய்து அனுப்பி வைத்தனா்.