இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு அரசு வேலை, வீடு! -முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதி
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு அரசு வேலை மற்றும் வீடு வழங்கப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதியளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தார். 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதற்காக முதல்வர் ரேவந்த் ரெட்டி வாழ்த்தினார்.
மும்பையில் நடந்த இந்திய அணியின் வெற்றி ஊர்வலத்துக்குப் பின் ஹைதராபாத்தில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக முதல்வரின் அலுவலத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அவரது மகனுடன் சென்றார் சிராஜ்.
சர்வதேச கிரிக்கெட்டுக்கும், நமது தெலங்கானா மாநிலத்துக்கு பெருமை சேர்த்த முகமது சிராஜூக்கு வாழ்த்துக்கள் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிராஜூக்கு ஹைதராபாத் அல்லது அருகில் உள்ள இடத்தில் அரசு சார்பில் வேலை, ஒரு வீடு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் முதல்வர் ரேவந்த் ரெட்டி.
இந்த நிகழ்ச்சியில், முகமது சிராஜ் இந்திய அணியின் ஜெர்சியை முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பரிசாக வழங்கினார். இந்டஹ் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கோட்டிரெட்டி வெங்கட் ரெட்டி, புங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.