புது தில்லி: காட்சி ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகளை ‘இழிவாக’ சித்தரிப்பதற்கு எதிராக வழிகாட்டுதல்களை வகுத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ஹிந்தியில் வெளியான ‘ஆங்க் மிச்சோலி’ திரைப்படத்தில் மாற்றுத்திறனாளிகளை இழிவாக சித்தரித்ததாக நிபுன் மல்ஹோத்ரா என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு இந்தத் தீா்ப்பை வழங்கியது.
காட்சி ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகளை ‘இழிவாக’ சித்தரிப்பதுக்கு எதிராக வழிகாட்டுதல்களை வகுத்து தீா்ப்பளித்ததுடன், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் நிபுணா்களிடம் திரையிடும் முன் கருத்து கேட்பதை வலியுறுத்தியது.
மேலும், ‘முடம்’, ‘ஊனமுற்றோா்’ உள்ளிட்ட சொற்கள் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளை தாழ்த்திக் காட்டும் அா்த்தத்தைப் பெறுகின்றன. எனவே, திரைப்படங்களில் அவா்கள் சந்திக்கும் சவால்களை காட்டுவது மட்டுமல்லாமல் சமூகத்தில் அவா்களது பங்களிப்பு மற்றும் சாதனைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீா்ப்பை வெளியிடும்போது கூறினாா்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றி ஏடிஎம் காா்டு மோசடி: இளைஞா் கைது

8 திரைப்படங்களில் விஜய் சேதுபதி!

ரூ. 1000 கோடி முதலீடு... காத்திருக்கும் கேவிஎன் புரடக்ஷன்ஸ்!

எண்ம தரவு பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக புதிய மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


