அதிகார துஷ்பிரயோகம் செய்த உதவி ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்தியத் தரவரிசையில், 821 ஆவது இடத்தைப் பெற்ற பூஜா கேத்கர், புணேவில் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பூஜா, தான் பயன்படுத்தி வந்த `ஆடி’ காரில் `மகாராஷ்டிர அரசு’ என்று குறிப்பிட்டதுடன், சைரன் விளக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தன்னுடைய சொந்த காருக்கு பேன்சி பதிவெண்ணும் அளிக்குமாறு அதிகாரத் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
மேலும், ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரியான பூஜாவின் தந்தையும், பூஜாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பூஜாவின் செயல்கள் குறித்து அறிந்த புனே மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் திவாஸ், மாநில தலைமைச் செயலாளருக்கு, பூஜாவின் செயல்கள் குறித்து கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து, பூஜா கேத்கர் வாஷிம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!

டிஆா்பி பணிகளுக்கு 30 இணைப் பேராசிரியா்கள் தற்காலிக பணியிட மாற்றம்

போடி நகராட்சி ஆணையா் பணியிட மாற்றம்

மோடி ஆட்சியில்தான் ஆளுநா்கள் அதிகார துஷ்பிரயோகம் அதிகரிப்பு: நாராயணசாமி குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


