பிஎம்டபிள்யூ கார் விபத்து: மிஹிர் ஷாவுக்கு காவல் நீட்டிப்பு!

கார் ஓட்டிவந்ததாக கூறப்படும் மிஹிர் ஷாவுக்கு ஜூலை 16 வரை விசாரணை காவல்
பிஎம்டபிள்யூ கார் விபத்து
பிஎம்டபிள்யூ கார் விபத்து

பிஎம்டபிள்யூ காரை ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்திய வழக்கில் முதன்மை குற்றவாளியான மிஹிர் ஷாவிடம் விசாரணை மேற்கொள்ள ஜூலை 16 வரை காவல் நீட்டித்து நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மூன்று நாள்களுக்கு முன்பு மும்பை வோர்லி பகுதியில் தம்பதி மீது பிஎம்டபிள்யூ காரை ஏற்றிய விபத்தில் பெண் பலியானார். ஆண் காயமுற்றார்.

கார் ஓட்டிவந்ததாக கூறப்படும் மிஹிர் ஷா தலைமறைவாக இருந்தார். அவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தலைமை பெருநகர நீதிபதி எஸ்பி. போசாலே அமர்வில், காவல்துறை தரப்பு, இது கொடுமையான இரக்கமற்ற குற்றம் எனத் தெரிவித்தது. மிஹிர் ஷா தப்புவதற்கு உதவியவர் யார் என்பதை அறிந்து கொள்ள விசாரணை மேற்கொள்ள வேண்டும் என போதுமான அவகாசம் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் கேட்கப்பட்டது. மேலும் வாகனத்தின் நம்பர் பிளேட் இன்னும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

மிஹிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷா சிவசேனை கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். முன்னர் ராஜேஷ் ஷா, ஓட்டும்போது உடனிருந்த ஓட்டுநர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர். ராஜேஷ் ஷா தற்போது பிணையில் வெளிவந்த நிலையில் மிஹிர் ஷா தப்பிச் செல்ல அவர் உதவியிருப்பார் என சந்தேகிக்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ கார் விபத்து
பிஎம்டபிள்யூ கார் விபத்து மதுவினால் ஏற்பட்டதாக சந்தேகம்!

ஓட்டுநர் பிடாவட்டுக்கு ஜூலை 11 வரை காவல் அவகாசமுள்ள நிலையில் இன்னமும் காவல்துறை விசாரணையில் அவர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com