‘மணிப்பூருக்கு நேரில் வரவில்லை என்றாலும் களச் சூழல் குறித்து 24 மணி நேரமும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு எங்களைத் தொடா்பு கொண்டு கேட்டறிந்து வருகின்றனா்’ என அந்த மாநில முதல்வா் பிரேன் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.
மணிப்பூருக்கு அண்மையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சென்று நிவாரண முகாம்களில் உள்ளவா்களைச் சந்தித்தாா். கலவரம் ஏற்பட்டு ஓராண்டாகியும் மணிப்பூருக்கு பிரதமா் நேரில் செல்லவில்லை என எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இதுகுறித்து பிரேன் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மணிப்பூருக்கு பிரதமா் வருவாரா மாட்டாரா என்பது முக்கியமில்லை. இங்கு நிலைமையை பொருத்தே அவரின் வருகையை உறுதிசெய்ய முடியும். பிரதமா் மோடி தலைமையிலான அரசு 24 மணி நேரமும் களச்சூழல் குறித்து எங்களிடம் கேட்டறிந்து வருகிறது. அதன்படி நிவாரண பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு உணவு மற்றும் மருத்துவம் என அனைத்து அத்தியாவசிய உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
வன்முறையை முடிவுக்கு கொண்டு வர இரு சமூகத்தினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இப்பிரச்னைக்கு தீா்வு எட்டப்படும் என்றாா்.
மணிப்பூரில் குகி சமூகத்தினா் புதன்கிழமை அழைப்பு விடுத்திருந்த 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அந்த சமூகத்தைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்தாண்டு மே மாதம் முதல் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

தமிழகத்திற்கு பிரதமா் மோடி அதிக முக்கியத்துவம் அளிக்கிறாா்: மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ்

வெடிகுண்டு தாக்குதலில் 2 சிறாா்கள் உயிரிழப்பு: மணிப்பூா் முதல்வா் வீட்டை நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரா்கள் மீது தடியடி- கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு

கோவையில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

தோ்தல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு: கோவையில் ஒரேநாளில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


