ரியல் எஸ்டேட்டில் ஆர்வம் காட்டும் டி.கே சிவகுமார்: பாஜக தலைவர் குற்றச்சாட்டு!

காங்கிரஸ் அரசு மாநிலத்தின் வளர்ச்சியில் சிறிதும் கவலைப்படவில்லை.
கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா
கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா
Published on
Updated on
1 min read

மாநிலத்தில் டெங்கு பாதிப்பு குறித்து கர்நாடக அரசு சிறிதும் கவலைப்படவில்லை என்று அந்த மாநில பாஜக தலைவர் பி.ஓய். விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக தலைவர் கூறுகையில்,

கர்நாடக மாநிலத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதோடு, இறப்புகளும் அதிகளவில் பதிவாகி வருகின்றது. இந்த நிலையில் டெங்கு பாதிப்பு குறித்து அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, இதுதொடர்பான அமைச்சர் டெங்கு பாதிப்பை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனது தொகுதியில் டெங்கு பாதிப்பால் ஒன்பது மாத குழந்தை உயிரிழந்தது. இந்த விவகாரத்தைச் சட்டப் பேரவையிலும் குரல் எழுப்புவோம். மேலும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரைத் தாக்கிய பேசிய அவர், ரியல் எஸ்டேட்டில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா
வால்மீகி வளா்ச்சிக் கழக வழக்கில் அமலாக்கத் துறை சோதனை தேவையற்றது: டி கே சிவக்குமார்

தற்போதைய காங்கிரஸ் அரசு மாநிலத்தின் வளர்ச்சியில் சிறிதும் கவலைப்படவில்லை. மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன. துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ராமநகரா மாவட்டத்தை பெங்களூரு தெற்கு எனப் பெயர் மாற்றம் செய்யப்போகிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்னணி என்ன என்பது கடவுளுக்குத்தான் தெரியும். சிவகுமார் ரியல் எஸ்டேட்டில் மட்டும் ஆர்வம் காட்டிவருவது முழு கர்நாடகத்துக்கும் தெரியும் என்றார்.

கர்நாடகத்தில் டெங்குவால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அகற்றுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஒவ்வொரு மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலுக்காக தனித்தனியாக ஒரு வார்டில் 10 படுக்கைகள் ஒதுக்குமாறு அவர் அறிவுறுத்தினார். கர்நாடகத்தின் பெங்களூருவில் பருவமழை பெய்து வருவதால் டெங்கு வழக்குகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com