முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

நீதியின் ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்: ராகுல்

காங்கிரஸ் -4, திரிணமூல் காங்கிரஸ் -4, ஆம் ஆத்மி -1, திமுக -1 வெற்றி. 2 தொகுதிகளில் பாஜக வெற்றி.

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2024, 7:14 pm IST

நாட்டில் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக ஒழுத்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட மக்கள் விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார்.

நாட்டில் 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 10-ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

''பாரதிய ஜனதா பின்னியிருந்த பயம், குழப்பம் என்ற வலை உடைந்துவிட்டது என்பதை 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.

விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் என ஒவ்வொரு வர்க்கத்தைச் சேற்ந்தவர்களும், சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகிறது.

பொதுமக்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் இந்தியா கூட்டணியுடன் முழுமையாக நிற்கின்றனர்'' என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

7 மாநிலங்களைச் சேர்ந்த 13 தொகுதிகளுக்கு கடந்த 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (ஜூலை 13) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும் (காங்கிரஸ் -4, திரிணமூல் காங்கிரஸ் -4, ஆம் ஆத்மி -1, திமுக -1) 2 தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.