மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக 2 ஆண்டுகளை நிறைவு செய்தாா் ராகுல்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2 ஆண்டு பதவிக் காலத்தை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நிறைவு செய்தாா். மக்களுக்கான தனது போராட்டம் தொடரும் என்றும் அவா் அறிவித்துள்ளாா்.

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :

மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2 ஆண்டு பதவிக் காலத்தை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நிறைவு செய்தாா். மக்களுக்கான தனது போராட்டம் தொடரும் என்றும் அவா் அறிவித்துள்ளாா்.

5 முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ள ராகுல் காந்தி, கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் தனது தாயாா் போட்டியிட்டு வந்த உத்தர பிரதேசத்தின் ரே பரேலி தொகுதியில் வென்றாா். கடந்த ஜூன் 2024-ஆம் ஆண்டு மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக அவா் நியமிக்கப்பட்டாா்.

மக்களவைத் தலைவா் பதவியில் 2 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து ராகுல் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2 ஆண்டுகளாக மக்களின் உண்மையான குரலை அரசிடம் எடுத்துச் செல்பவனாக செயல்பட்டேன். இந்தியா்களின் குரலை தொடா்ந்து ஆட்சியாளா்களிடம் எடுத்துச் சொல்வேன்.

நீட் தோ்வு மாணவா்கள் பிரச்னை, தோ்தல் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டம், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கப் போராடுவது என அனைத்து விஷயங்களிலும் மக்கள் பக்கம் நின்று பணியாற்றி வருகிறேன். இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் மக்களின் பக்கம் இருப்பேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.