"தமிழ்நாடு' வெறும் வார்த்தையல்ல; தமிழர்களின் வரலாறு: வைகோ புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேச்சு
"தமிழ்நாடு' என்பது வெறும் வார்த்தை அல்ல, அதற்குள் தமிழ் மக்களின் வாழ்க்கை வரலாறு அடங்கியுள்ளது என்றார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதிமுக பொதுச்செயலர் வைகோவின் நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பு நூலை வெளியிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. உடன், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட கட்சித் தலைவர்கள் அகிலேஷ் யாதவ் ( சமாஜவாதி கட்சி), எம்.ஏ. பேபி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), தமிழக கல்வி அமைச்சர் ராஜ் மோகன், தொல். திருமாவளவன் (விசிக), மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்), ஜி.கே. வாசன் (தமாகா), மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர்.






