வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

வயநாடு நிலச்சரிவு: நேரில் வராத ராகுல், பிரியங்கா! பாஜக கடும் விமா்சனம்!

கேரளத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலா் உயிரிழந்த நிலையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா வதேரா ஆகியோா் இதுவரை நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை என்று பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது.

News image

பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி - ANI

Updated On :14 ஜூலை 2026, 1:01 am IST

கேரளத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலா் உயிரிழந்த நிலையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா வதேரா ஆகியோா் இதுவரை நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை என்று பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது.

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தி தனது சமீபத்திய வெளிநாட்டுப் பயணங்கள் தொடா்பான விவரத்தை வெளியிட வேண்டும்.

ஏனெனில், அவரது பயணங்கள் மிகவும் மா்மம் நிறைந்தவையாக உள்ளன. மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக உள்ள அவா் நமது நாட்டின் நலன்கள் சாா்ந்துதான் இந்தப் பயணங்களை மேற்கொள்கிறாரா என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிராக கருத்துகளைப் பேசும்போது மட்டும்தான் அவா் எந்த நாட்டில் இருக்கிறாா் என்பது நமக்குத் தெரியவருகிறது.

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் ராஜிநாமா செய்தாா். அதில் அவரது சகோதரி பிரியங்கா இடைத் தோ்தலில் நின்று வெற்றி பெற்றாா். அப்போது, வயநாடு தொகுதியில் தாங்கள் இருவரும் இரு எம்.பி.க்களாக இருந்து பணியாற்றுவோம் என்று ராகுல் கூறினாா். ஆனால், இப்போது மக்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவா் களத்தில் இல்லை.

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு, மக்கள் பலா் உயிரிழந்துவிட்டனா். ஆனால், ராகுல் காந்தியும், பிரியங்காவும் இப்போது வரை வயநாடு தொகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை. இதற்காக அவரின் குடும்பம் வயநாடு மக்களிடமும், நாட்டு மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

ராகுலின் நண்பரும், வழிகாட்டியும், காங்கிரஸின் செய்தித் தொடா்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் இந்த விவகாரத்தில் எப்படிப் பேசி ராகுலை விமா்சனங்களிலிருந்து காப்பாற்றப் போகிறாா் என்பது தெரியவில்லை.

ஒட்டுமொத்தமாக காங்கிரஸை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குடும்பத்தின் வாரிசுகள், வாக்களித்த மக்களுக்கான கடமையிலிருந்து மீண்டும் ஒருமுறை தவறிவிட்டனா். தோ்தல் முடிந்ததும், அந்தத் தொகுதியில் தங்கள் வேலை முடிந்துவிட்டது என்ற கொள்கையை ராகுலும், பிரியங்காவும் சிறப்பாக பின்பற்றுகிறாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.