பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன்!

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் நேரில் பார்வையிட்டது பற்றி...

News image

பினராயி விஜயன். - படம் - எக்ஸ்

Updated On :9 ஜூலை 2026, 12:05 pm IST

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் வியாழக்கிழமை (ஜூலை 9) நேரில் பார்வையிட்டார்.

வயநாடு மாவட்டம், மெப்பட்டியில் தனியார் நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் 4 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்கள் எம்.வி. கோவிந்தன் மற்றும் எம்.வி. ஜெயராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமுக்கு சென்ற பினராயி விஜயன் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களின் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Summary

Former Chief Minister and current Leader of the Opposition Pinarayi Vijayan visited the landslide-affected areas in Kerala's Wayanad district in person on Thursday (July 9).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.