சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு!3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

வயநாடு நிலச்சரிவுக்குக் காரணம் என்ன? விரிவான விசாரணை நடத்தப்படும்: கேரள முதல்வர்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பற்றி..

News image

வி.டி. சதீசன் - file photo

Updated On :8 ஜூலை 2026, 12:16 pm IST

கேரள மாநிலம், வயநாட்டின் மேப்பாடி அருகேயுள்ள கல்லாடி சுரங்கப்பணியின்போது ஏற்பட்ட நிலச்சரிவுக்கான காரணங்களை அறிய அரசு விரிவான ஆய்வு மேற்கொள்ளும் என்று கேரள முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்தார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு வயநாட்டின் முண்டக்கை-சூரல்மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே இந்த நிலச்சரிவு நிகழ்ந்துள்ளது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கடந்த சில நாள்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கல்லாடியில் உள்ள மீனாட்சி மேம்பாலம் அருகே கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் சுரங்கப் பணிகள் நடைபெற்றுவரும் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக முதல்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மத்திய அரசு பிறப்பித்த வழிகாட்டுதல்களைக் கட்டுமான நிறுவனம் முறையாகப் பின்பற்றியதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

வயநாட்டையும் கோழிக்கோட்டையும் இணைக்கும் சுரங்கப்பாதைக்கான பணிகள், இந்த இரண்டு ஆய்வுகளும் நிறைவடைந்த பின்னரே மீண்டும் தொடங்கப்படும்.

நிலச்சரிவு தொடர்பான அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, இன்று காலையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஆய்வுகளை மேற்கொள்வது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கான காரணங்களைக் கண்டறியத் தேவையான அனைத்து சட்ட மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

கட்டுமான பகுதிக்கு மேல் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாங்கள் அதை ஆய்வு செய்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

Kerala Chief Minister V D Satheesan on Wednesday said that the government will carry out a detailed examination to know the reasons behind the Wayanad landslide that claimed three lives on July 7.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.