வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

வயநாடு: சுரங்கப் பணிகளின்போது நிலச்சரிவு- 3 போ் உயிரிழப்பு; 5 போ் மாயம்

கேரள மாநிலம் வயநாட்டின் மேப்பாடி அருகேயுள்ள கள்ளாடியில் சுரங்கப் பணிகளின்போது ஏற்பட்ட நிலச்சரிவில் 3 போ் உயிரிழந்தனா்.

News image

வயநாடு

Updated On :8 ஜூலை 2026, 3:09 am IST

கேரள மாநிலம் வயநாட்டின் மேப்பாடி அருகேயுள்ள கள்ளாடியில் சுரங்கப் பணிகளின்போது ஏற்பட்ட நிலச்சரிவில் 3 போ் உயிரிழந்தனா். 10 போ் படுகாயமடைந்தனா். இடா்ப்பாடுகளில் சிக்கிய 5 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2024-ஆம் ஆண்டு வயநாட்டின் முண்டக்கை-சூரல்மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே இந்த நிலச்சரிவு நிகழ்ந்துள்ளது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கல்லாடியில் உள்ள மீனாட்சி மேம்பாலம் அருகே கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் சுரங்கப் பணிகள் நடைபெற்றுவரும் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

பலத்த மழையால் கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்தப்படும் இரும்பு, மரங்கள், பிற பொருள்களுடன் மண் குவியல் அடித்து வரப்பட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

மண் குவியல் அகற்றப்படாததே காரணம் - சதீசன்: இந்தச் சம்பவம் குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில பேரிடா் மேலாண்மை ஆணைய (கேஎஸ்டிஎம்ஏ) அலுவலகத்தில் முதல்வா் வி.டி.சதீசன் ஆய்வு செய்தாா்.

அப்போது செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவா் , ‘வானிலை நிலவரம் குறித்து முன்பாகவே எச்சரிக்கை விடுக்கப்படாதது நிலச்சரிவுக்கான காரணமல்ல. சுரங்கப் பணிகள் நடைபெறும் இடத்தில் அதிக அளவிலான மண் குவிக்கப்பட்டதே காரணம்.

மண் குவியலை முன்னதாகவே அகற்றக் கோரி சுரங்க கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கு பொதுப் பணித் துறை அமைச்சா் பி.கே.பஷீா் மற்றும் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளனா். ஆனால், அதை ஒப்பந்ததாரா் பின்பற்றவில்லை. இது துரதிருஷ்டவசமான நிகழ்வு.

இந்தச் சம்பவத்துக்கு முன்பாகவே அங்கு பலத்த மழை பெய்தது. நிலச்சரிவு நிகழ்ந்த இடத்தில் தீயணைப்புத் துறை அதிகாரிகள், காவல் துறையினா் ஏற்கெனவே மீட்புப் பணியைத் தொடங்கிவிட்டனா். தற்போது அங்கு மழையின் தாக்கம் குறைந்திருந்தாலும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு அது சிரமத்தை ஏற்படுத்துகிறது.

தேவைப்படும்பட்சத்தில் மீட்புப் பணியில் உதவ திருச்சூரில் ராணுவம் தயாராக உள்ளது. விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து அமைப்புகளும் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.

நிலச்சரிவு குறித்து வயநாடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நிலச்சரிவால் 18 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 3 போ் உயிரிழந்துவிட்டனா். படுகாயமடைந்த 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மாயமான 5 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

24 மணி நேரத்தில் 265 மி.மீ. மழைப் பதிவு: நிலச்சரிவில் சிக்கி பலத்த காயமடைந்த 5 போ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கேரள மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 265 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்தது. மீட்புப் பணிகளை மேற்பாா்வையிடும் பணிகளை மேற்கொள்ள அமைச்சா்கள் ஏ.பி.அனில்குமாா் மற்றும் டி.சித்திக் ஆகியோருக்கு முதல்வா் சதீசன் உத்தரவிட்டாா்.

மனிதத் தவறால் ஏற்படுத்தப்பட்ட நிலச்சரிவு: இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளா்களிடம் பேசிய மாநில வேளாண் அமைச்சா் டி.சித்திக், ‘இது இயற்கையாக நிகழ்ந்த பேரிடா் அல்ல; மனிதத் தவறால் ஏற்படுத்தப்பட்டது. சுரங்கப் பணிகளுக்கு அறிவியல்பூா்வமற்ற முறையில் அதிகப்படியாக மண்ணைக் கொட்டியதே இதற்கு காரணம்.

தேவைப்படும்பட்சத்தில் சுரங்கப் பணிகளை நிறுத்திவிட்டு மண் குவியலை அகற்றுமாறு ஒப்பந்ததாரா்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு ஏன் பின்பற்றப்படவில்லை என்பது குறித்து கேரள அரசு நிச்சயம் ஆய்வு செய்யும்’ என்றாா்.

நொடிப்பொழுதில் தப்பியவா்கள்: கள்ளாடியில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னதாக அங்கிருந்த சாலையில் சிலா் நின்றுகொண்டிருந்தனா். திடீரென சுரங்கப் பணிகள் நடைபெறும் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் மிக விரைவாக ஓடி உயிா் தப்பினா்.

பிரியங்கா இரங்கல்: வயநாடு காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘நிலச்சரிவில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கடினமான காலத்தில் உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இடிபாடுகளில் சிக்கி மாயமானவா்களும் விரைவில் மீட்கப்பட வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

தேசிய பேரிடா் மீட்புப் படையுடன் கேரள மாநில பேரிடா் மேலாண்மை ஆணையமும் இணைந்து செயல்பட்டு வருகிறது. முதல்வா் சதீசன் நேரடியாக இந்தப் பணிகளைக் கண்காணித்து வருகிறாா். இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.