
ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்கு பின் இன்று(ஜூலை 14ஆம் தேதி) திறக்கப்பட்டது.
கடந்த 1978-ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை. அண்மையில் நடந்து முடிந்த ஒடிஸா மாநில பேரவைத் தோ்தலில் இது மிகப்பெரும் அரசியல் விவகாரமாக உருவெடுத்தது.
இதையடுத்து, 46 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 14-ஆம் தேதி புரி ஜெகந்நாதா் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கக்கோரி மாநில அரசுக்கு உயா்நிலைக் குழு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் மாநில அரசு அமைத்த குழுவின் உறுப்பினர்கள் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகந்நாதா் கோவிலுக்குள் நுழைந்து சடங்குகள் செய்து, பொக்கிஷ அறையை மீண்டும் திறந்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து புரி ஆட்சியர் உள்பட 11 பேர் கொண்ட அந்த குழுவினர் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களை கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.