2015-க்கு பிறகு குடியேறியவர்களை நாடு கடத்துவோம்: சிஏஏ குறித்து அஸ்ஸாம் முதல்வர்!

வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் சிஏஏ கீழ் விண்ணப்பிக்கவில்லை என்றால் வழக்குப்பதிவு.
அஸ்ஸாம் முதலவா் ஹிமந்த விஸ்வ சா்மா
அஸ்ஸாம் முதலவா் ஹிமந்த விஸ்வ சா்மா
Published on
Updated on
1 min read

குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளின்படி 2015-க்குப் பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதுவரை 8 பேர் மட்டுமே சிஏஏ சட்டத்தில் கீழ் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் இருவர் மட்டுமே அரசின் நேர்க்காணலில் பங்கேற்றிருப்பதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அஸ்ஸாம் முதலவா் ஹிமந்த விஸ்வ சா்மா
புதிய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி: யார் இவர்?

மேலும், அவர் கூறியதாவது:

”2015-க்கு முன்பு இந்தியா வந்தவர்களுக்கு சிஏஏ விதிகளின்படி விண்ணப்பிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

அதேபோல், இந்தியாவுக்குள் வந்தவர்கள் சிஏஏ-வின் கீழ் விண்ணப்பிக்க தவறினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கபடும்.” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம், அஸ்ஸாம் மாநிலத்தில் குறைந்தபட்ச நபர்கள் மட்டுமே வெளிநாட்டில் இருந்து குடியேறிவர்கள் இருப்பதால், சிஏஏ மாநிலத்துக்கு முக்கியமற்றது என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்திருந்தார்.

மேலும், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னதாக இந்தியாவுக்குள் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை நோக்கமாக சிஏஏ சட்டம் கொண்டுள்ளதாக அஸ்ஸாம் முதல்வர் கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது கருத்தை தொடர்ந்து, அஸ்ஸாம் மாணவர் சங்கம் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின அமைப்புகள் குவஹாத்தி, லக்கிம்பூர், நல்பாரி, திப்ருகார், தேஜ்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிஏஏ சட்ட நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com