2-ஆம் நிலை நகரங்களில் வீடுகள் விற்பனை 11% அதிகரிப்பு
கடந்த நிதியாண்டில் இந்தியாவின் 30 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகள் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.


புது தில்லி: கடந்த நிதியாண்டில் இந்தியாவின் 30 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகள் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ‘ப்ராப்ஈக்விட்டி’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் முதல் 30 இரண்டாம் நிலை நகரங்களில் 2,07,896 வீடுகள் விற்பனையாகின.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் அதிகமாகும். அப்போது 1,86,951 வீடுகள் விற்பனையாகியிருந்தன.
முதல் 10 இரண்டாம் நிலை நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரத், நாசிக், காந்தி நகா், ஜெய்ப்பூா், நாகபுரி, புவனேசுவரம், விசாகப்பட்டினம், மொஹாலி ஆகியவை இந்த விற்பனையில் 80 சதவீத பங்களிப்பை அளித்துள்ளன.
இந்த 10 நகரங்களிலும் மட்டும் கடந்த 2022-23-ஆம் ஆண்டில் 1,51,706 வீடுககள் விற்பனையாகியிருந்தன. அந்த எண்ணிக்கை 2023-24-ஆம் ஆண்டில் 11 சதவீதம் அதிகரித்து 1,68,998 ஆகியுள்ளது.
அடுத்த 20 இடங்களில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களாக போபால், லக்னௌ, கோவா, கோயம்புத்தூா், ராய்ப்பூா், விஜயவாடா, இந்தூா், கொச்சி, திருவனந்தபுரம், மங்களூா், குண்டூா், பிவாடி, டேராடூன், லூதியானா, சண்டீகா், ஆக்ரா, மைசூா், சோனேபட், பானிபட், அமிருதசரஸ் ஆகியவை உள்ளன.
மதிப்பீட்டு நிதியாண்டின் முதல் 30 இரண்டாம் நிலை வீடுகள் விற்பனையில் சுமாா் 70 சதவீதப் பங்கை மேற்கு மண்டலம் வகிக்கிறது. அந்த மண்டலத்தில் வீடுகள் விற்பனை 1,29,423-லிருந்து 11 சதவீதம் அதிகரித்து 1,44,269-ஆக உள்ளது.
வடக்கு மண்டலத்தில் இந்த எண்ணிக்கை 24,273-லிருந்து 8 சதவீதம் அதிகரித்து 26,308-ஆக உள்ளது.
முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில் வீடுகள் விற்பனை தெற்கு மண்டலத்தில் 21,947-லிருந்து 8 சதவீதம் அதிகரித்து 20,244-ஆகவும் கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் 13,011-லிருந்து 18 சதவீதம் அதிகரித்து 15,372-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...