ஜம்முவில் நன்கு பயிற்சிபெற்ற 50 இளம் பயங்கரவாதிகள்: உளவுத்துறை சொல்வது என்ன?

ஜம்முவில் நன்கு பயிற்சிபெற்ற 50 இளம் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளூர் மக்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்முவில் ரோந்து பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படை வீரர்கள்.
ஜம்முவில் ரோந்து பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படை வீரர்கள்.
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானில் நன்கு பயிற்சிபெற்ற 50 இளம் பயங்கரவாதிகள் ஜம்முவில் உள்ளூர் மக்களுடன் கலந்து வாழ்வதாகவும், இளம் பயங்கரவாதிகள், உள்ளூர் ஸ்லீப்பர் செல்களின் உதவி இல்லாமல் வாழும் திறன்பெற்றவர்களாக இருப்பதாகவும் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களுடன் கலந்து வாழ்ந்துகொண்டிருப்பதாகவும், அவர்களுக்கு பாகிஸ்தானிலிருந்து தகவல் வரும்போது, திடீா் தாக்குதல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியால், ஜம்முவுக்குள் ஏராளமான பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். இந்தியாவுக்குள் நுழையும் பயங்கரவாதிகள் தற்போது இளைஞர்களாகவும், நவீன கருவிகளுடன் வருவதால், உள்ளூர் ஆள்களின் உதவியின்றி அவர்களே வாழ்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு, தகவல்களை திரட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர், தரைதளம் சமமாக இருக்கும் என்பதால், அதனை கண்காணிப்பது எளிது, ஆனால், பூஞ்ச் - ரஜௌரி போன்றவை ஏற்ற இறக்கமான நிலப்பரப்புகளை கொண்டவை, எனவே கண்காணிப்பதும் கடினம் என்கிறார்கள் தகவலறிந்த வட்டாரங்கள்.

தற்போது, ஜம்மு அரசான, குறைந்த அளவிலான படைகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்கிறது, பாகிஸ்தான் பக்கத்திலிருந்து இந்தியாவின் எல்லைக்குள் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக இந்த இளைஞர்கள் நுழையலாம் என்றும், கருதப்படுகிறது.

ஜம்முவில் ரோந்து பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படை வீரர்கள்.
கேரளத்தில் 42 மணி நேரம் லிஃப்டில் சிக்கியவர் சொன்ன ரகசியம்!

பக்தர்கள் பேருந்து மீது தாக்குதல், ஐஏஎஃப் வாகனம் மீது தாக்குதல் என ஜம்மு பகுதியில், அண்மையில் தொடர்ச்சியாக பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அமைதியான சூழல் நிலவி வந்த ஜம்மு பிராந்தியத்தின் பூஞ்ச், ரஜெளரி உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. விமானப் படை வாகனம், ஆன்மிக சுற்றுலாப் பயணிகளின் பேருந்து மீது தாக்குதல்கள் மற்றும் கதுவாவில் அண்மையில் கொல்லப்பட்ட வீரா்கள் வளா்ந்து வரும் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுகின்றன.

முன்னதாக தாக்குதல்கள் குறித்து ஆய்வு செய்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பாகிஸ்தானிலிருந்து ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகள் ‘பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு’ தந்திரத்தைக் கையாள்கிறார்கள்.

இந்தியாவுக்குள் ஊடுருவி சில காலம் வாழ்ந்த பிறகு தாக்குதலில் ஈடுபடுவதற்கான அறிவுறுத்தல்கள் பாகிஸ்தானிலிருந்து கிடைக்கும் வரையில் உள்ளூா் மக்களுடன் இணைந்து இயல்பு வாழ்க்கையை அவா்கள் வாழ்கின்றனா்.

உதாரணமாக கடந்த ஏப்ரலில் சோபோரில் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகள் சுமாா் 18 மாதங்கள் இந்தியாவில் பதுங்கி இருந்துள்ளனா். அவா்கள் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கும் காஷ்மீா் முழுவதும் உள்ள பயங்கரவாத குழுக்களுடன் தொடா்பில் இருந்ததற்கும் சான்றுகள் உள்ளன.

இதேபோல, சோபோரில் கடந்த மாதம் 19-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதி உஸ்மான் கொல்லப்பட்டபோது, மேலும் பல்வேறு பயங்கரவாதிகளின் திட்டங்கள் அம்பலமாகின.

பாதுகாப்பு அதிகாரிகளை தவறாக வழிநடத்த ‘அல்ட்ரா செட்’ கைப்பேசிகள் போன்ற பாதுகாக்கப்பட்ட தகவல் தொடா்பு கருவிகளையும் இணைய செயல்பாட்டையும் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதால், தொழில்நுட்ப நுண்ணறிவை மட்டும் நம்பியிருப்பது பலனளிக்காது என்கிறார்கள் அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com