மேகேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் மேலிடத்திற்கு முதல்வர் விஜய் அழுத்தம் கொடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்! நவ. 18-ல் தவெகவின் 2 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்! சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகம் ஈடு இணையற்ற பங்களிப்பு: பிரதமர் மோடிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை -பாஜக தலைவருக்கு சிதம்பரம் கண்டனம்!

பாஜக தலைவர் அமித் மால்வியாவின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் கண்டனம்..

Updated On :

அரசியல் படுகொலைகள் குறித்த பாஜக தலைவர் அமித் மால்வியாவின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக தகவல் தொடர்புப் பிரிவு தலைவர் அமித் மால்வியா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு பேசுகையில், காங்கிரஸ் தலைவர்கள் அதிலும் குறிப்பாக ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வன்முறையை ஆதரிக்கின்றனர்.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர்(ஜோ பைடன் தரப்பு) டொனால்டு டிரம்புக்கு எதிரான விமர்சனஙக்ளை முன்வைப்பதை ஒப்பிட்டு இந்தியாவில் மோடிக்கு எதிராக கங்கிரஸ் தலைவர்கள் விமர்சிப்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

“தங்கள் கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதை நினைவுகூறும் காங்கிரஸ், அதற்கு முன், காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் எடுத்த அரசியல் முடிவுகளுக்காகவே கொல்லப்பட்டுள்ளனர் என்பதை காங்கிரஸுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்” எனப் தெரிவித்துள்ளார் அமித் மால்வியா.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிஅர்ஸ், நன்னடத்தை கருதி அமித் மால்வியாவை மோடி உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அரசியல் வன்முறைக்கு ஜனநாயகத்தில் இடமில்லை. அமித் மால்வியாவின் கருத்து, அரசியல் படுகொலைகளை நியாயப்படுத்தும் விதமாக உள்ளது.

இதனை வன்மையகக் கண்டிப்பதாக பதிவிட்டுள்ள ப. சிதம்பரம், இதன்மூலம் அவர் கூற வருவது என்ன? ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் பேசியுள்ள மால்வியாவின் கருத்தை பாஜக தலைவர்கள் ஆதரிக்கின்றனரா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

திருமதி இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி ஆகியோரது படுகொலைகள் பயங்கரவாத சித்தாந்தங்களால், பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டவை.

அரசியல் தீர்மானங்கள் சரியா? தவறா? என்பது அரசியல் விவாதங்கள், ஆலோசனைகள் மூலம் தீர்மானிக்கப்படவும் நிராகரிக்கப்படவும் வேண்டும். படுகொலைகளை அரசியல் தீர்மானத்திற்கான் தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது எனப் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.