
கர்நாடகத்தின் சவனூர் தாலுகாவில் உள்ள மடபுரா கிராமத்தில் பெய்த கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகின்றது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மடபுரா கிராமத்தில் பெய்த கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது,
கிராமத்தில் உள்ள 'குடிசை' வீட்டில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், முத்தப்பா ஹரகுனி (35), அவரது மனைவி சுனிதா (30), தாய் யல்லம்மா (70), இரட்டை மகள்கள் ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது விழுந்தது.
மூவர் பலியான நிலையில், முத்தப்பா, அவரது மனைவி மற்றும் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், ஹாவேரி மக்களவை உறுப்பினரான கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.