8 ஆண்டுகளில் 800 யானைகள் பலி! கேரளத்தில்...

கேரளத்தில் 8 ஆண்டுகளில் 800 யானைகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யானைக் கூட்டம்
யானைக் கூட்டம்படம் | X
Published on
Updated on
1 min read

கேரளத்தில் கடந்த 2015 - 2023 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட 8 ஆண்டுகளில் 845 யானைகள் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது காலப்போக்கில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கேரளத்தில் உள்ள 4 மாநில யானைகள் காப்பகங்களில் நடத்திய ஆய்வில் இந்த தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த ஆய்வுகள் ஒரு அப்பட்டமான போக்கையும் காட்டுகின்றன.

இதில், இளவயதுடைய யானைகள், குறிப்பாக 10 வயதுக்குள்பட்டவை, இறப்புக்கான அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றன. இந்த அபாயகரமான விகிதம் தோராயமாக 40 சதவீதமாகும். யானைக் குட்டிகள் இறப்பு அதிகரிப்புக்கு யானை என்டோதெலியோட்ரோபிக் ஹெர்பெஸ் வைரஸ் ஹெமொரேஜிக் (EEHV-HD) என்ற நோய்க் காரணமாக கூறப்படுகிறது. யானை என்டோதெலியோட்ரோபிக் ஹெர்பெஸ் வைரஸானது யானைகளுடன் இணைந்து வாழ்கிறது.

படம் | X

வனத்துறையினர் சமீபத்தில் இலங்கையில் நடத்திய ஆய்வில், யானைகளுடன் இந்த வைரஸ் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது.

பெரிய யானைக் கூட்டங்களில் உள்ள யானைக் குட்டிகள் பரவிய நோய், அதன் எதிர்ப்பு சக்தி காரணமாக சிறந்த உயிர் பிழைப்பு விகிதத்தை வெளிப்படுத்துகின்றன.

பெரிய யானைக் கூட்டங்களுக்குள் EEHV-HD வைரஸை திறம்பட எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளை உருவாக்க குட்டிகளுக்கு உதவுகிறது. இதனால், அவற்றின் உயிர்பிழைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இப்பகுதியில் ஆசிய யானைகளின் உயிர்வாழ்வதற்கு இந்த நோய்த் தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறுவதைத் தடுக்க, இயற்கையான வாழ்விடங்களை மீட்டெடுப்பது முக்கியமானதாகும். மேலும், யானைக் கூட்டங்கள் ஆங்காங்கே இருப்பதைச் சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை யானைகளின் கணக்கெடுப்பு ஆய்வறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உணவு பற்றாக்குறையால் போதுமான அளவு தீவனம் கிடைக்காததும் யானைகளில் இறப்புக்கு காரணமாகின்றன.

யானைகள் அதிகளவில் இறப்பதற்கு அதிக வெப்பநிலை உணர்திறன், யானை வழித்தட மாற்றங்கள், காலநிலையில் நீர் சமநிலை, வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள், இடையூறுகள் உள்ளிட்டவைகளால் அதிகளவில் பாதிக்கபடுவதாக அந்த ஆய்வுத் தெரிவிக்கிறது.

யானைகளின் இறப்புகளை குறைப்பதற்கு ஒரு முறையான அணுகுமுறையின் அவசியத்தை உணர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள யானைகள் இறப்பு தணிக்கை கட்டமைப்பைப் போன்ற ஒரு கட்டமைக்கப்பட்ட நெறிமுறையை இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com