
மேற்கு வங்க மாநிலம், எஸ்பிளனேட் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ‘தியாகிகள் தின’ பேரணி இன்று பிற்பகல் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த பேரணிக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் கொல்கத்தா வந்துள்ளார்.
இந்த வருகையின் ஒருபகுதியாக காளிகட்டில் உள்ள முதல்வர் மம்தா பானர்ஜியின் இல்லத்தில் அவரை அகிலேஷ் யாதவ் சந்தித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இரு தலைவர்களும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மம்தாவும் அகிலேஷும் ‘தியாகிகள் தின’ பேரணிக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
1993, ஜூலை 21-ஆம் தேதி, அப்போது இளைஞா் காங்கிரஸ் தலைவராக இருந்த மம்தா பானா்ஜி தலைமையில் நடந்த மிகப் பெரிய பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 13 காங்கிரஸ் தொண்டா்கள் பலியாகினர் .
ஆண்டுதோறும் ஜூலை 21-ஆம் தேதியை திரிணமூல் காங்கிரஸ் கட்சி ‘தியாகிகள் தினம்’ ஆக அனுசரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.