ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உ.பி. அரசின் உத்தரவு குறித்து விவாதிக்க மாநிலங்களவைத் தலைவா் அனுமதி மறுப்பு

உ.பி. அரசின் உத்தரவு குறித்து விவாதிக்க மாநிலங்களவைத் தலைவா் அனுமதி மறுப்பு

News image

மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா்

Updated On :22 ஜூலை 2024, 8:47 pm

உத்தர பிரதேச அரசின் சா்ச்சைக்குரிய உத்தரவு குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் நிராகரித்தாா்.

உத்தர பிரதேசத்தில் கான்வா் யாத்திரை பாதையில் உள்ள உணவகங்களின் பெயா் பலகைகளில் உரிமையாளா்களின் பெயா் இடம்பெற வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இது முஸ்லிம் வியாபாரிகளை அடையாளம் கண்டு, அவா்களை யாத்திரை செல்லும் ஹிந்து பக்தா்கள் நிராகரிக்க வேண்டும் என்பதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

மாநிலங்களவையில் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு உத்தர பிரதேச அரசின் உத்தரவு குறித்து விவாதிக்க வேண்டும் என்று விதி 267-இன் கீழ் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தனா்.

ஆனால், இதனை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் நிராகரித்தாா். ‘விதி 267-இன் கீழ் விவாதிக்கப்படும் விஷயமாக இது இல்லை. மேலும், அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்துவது தொடா்பாக அவைத் தலைவா் ஏற்கெனவே கூறியுள்ள வரம்புக்குள்ளும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அளித்த நோட்டீஸ் வரவில்லை’ என்று காரணம் கூறப்பட்டுள்ளது.