உச்சநீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரப்படும் மனுக்கள் குறித்து தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வில்தான் முறையிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இல்லாவிட்டாலோ அல்லது அவா் அரசியல் சாசன அமா்வுக்குத் தலைமை ஏற்று வழக்கை விசாரித்து வந்தாலோ, அவசர வழக்குகளைப் பட்டியலிட்டு விசாரிப்பது குறித்து அவருக்கு அடுத்த மிக மூத்த நீதிபதியிடம் முறையிடுவதே வழக்கம்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உச்சநீதிமன்றத்தில் மிகவும் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரப்படும் மனுக்கள் குறித்து தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வில்தான் முறையிடப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு நவ.29-ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, விசாரணைக்குப் பட்டியலிட காத்திருக்க முடியாத அவசர மனுக்கள் குறித்து அரசியல் சாசன அமா்வுக்குத் தலைமை நீதிபதி தலைமை ஏற்றிருக்கும் வேளையிலும், நீதிமன்ற எண்.1-இல் முறையிட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு எதிராக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சாமானியா்களின் வலியை நீதித் துறை தீா்க்க வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் மனு

இளம் வழக்குரைஞரை போலீஸாா் காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பிசிஐ கடிதம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



