
ஆந்திர மாநிலம், நெல்லூரில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இன்று அதிகாலை ஐந்து மணியளவில் நெல்லூரில் இருந்து பித்ரகுண்டா ரயில் நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டது. விபத்தின்போது சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சரக்கு ரயில் தடம் புரண்டதால் விஜயவாடா நோக்கிச் செல்லும் ரயில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் பித்ரகுண்டா ரயில் நிலையத்தின் தெற்குப் பகுதியில் உள்ள 144வது லெவல் கிராசிங் கேட்டில் சரக்குகள் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் அங்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜயவாடா நோக்கிச் செல்லும் பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.